• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘ஹிட் -3’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

by Tamil2daynews
September 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘ஹிட் -3’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 வது படமான ஹிட் : மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case) எனும் திரைப்படத்தில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் பிரத்யேக காணொளி மூலம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதற்கிடையில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் வெற்றிகளுடன் பயணித்து வரும் நடிகர் நானி, ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில்  கலந்து கொண்டார் . ஹிட் 2 படத்தின் இறுதியில்  காட்சிப் படுத்தப்பட்டுள்ளபடி ஹிட் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் – ஹிட் ( HIT) அதிகாரியாக அவர் நடிப்பார். மேலும் ஹன்டர்ஸ் கமாண்ட் ஆஃப் ஹிட்  தேர்ட் கேஸ் (Hunter’s Command. of HIT : 3rd Case  எனும் இந்த படத்தில் அவர் மேலும் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.  அவரது இந்த தோற்றம் பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

இந்த படத்திற்காக நானி தன் புதிய வடிவிலான உடல் தோற்றத்திற்கு மாற்றம் பெற்றுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்திருக்கிறார்கள். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஸ்ரீ நாகேந்திர தாங்கலா பணியாற்றுகிறார்.

HIT-3 அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் :
நானி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால்போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே .மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தாங்கலா
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ் வெங்கடரத்தினம் ( வெங்கட்)
ஒலி கலவை : ஜி . சுரேன்
லைன் புரொடியுசர் : அபிலாஷ் மந்தாதுபு
தலைமை இணை இயக்குநர் : வெங்கட் மட்டிராலா
ஆடை வடிவமைப்பாளர்:  நானி  கமருசு
எஸ் எஃப் எக்ஸ் : சிங் சினிமா
வி எஃப் எக்ஸ் மேற்பார்வை : வி எஃப் எக்ஸ் டி டி எம் ( VFX DTM)
டி ஐ : B2h ஸ்டூடியோஸ்
வண்ணக் கலவை : எஸ். ரகுநாத் வர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Previous Post

தளபதி விஜய்யின் புதிய பட அறிவிப்பு

Next Post

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

Next Post

சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

Popular News

  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.