• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஆர்யமாலா’ – விமர்சனம்

by Tamil2daynews
October 17, 2024
in விமர்சனம்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஆர்யமாலா’ – விமர்சனம் 

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கதையை நம்பி வந்திருக்கும் படம் ஆரியமாலா.பெற்றோர் மற்றும் ஒரு தங்கையுடன் கிராமத்தில் வசிக்கிறார், நாயகி ஆரியமலா. இந்த நிலையில், நாயகிக்கு ஒரு கனவு.. அதில் நாயகன் தோன்றுகிறார். அந்த கற்பனை நாயகனை மனதார காதலிக்கிறார் நாயகி.அப்போது அந்த கிராமத்து திருவிழா நடக்கிறது. அதற்கு கூத்துகட்ட நாயகன் வருகிறார். நாயகி, கனவில் கண்ட அதே இளைஞன்.இருவரும் பார்வையாலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் தயக்கத்தை உடைத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார் நாயகன். ஆனால் நாயகி மறுத்துவிடுகிறார்.

இன்னொரு பக்கம், நாயகியை கொலை செய்ய அவரது மாமாவே திட்டமிடுகிறார்.மாமாவின் கொலை முயற்சியில் இருந்து நாயகி தப்பித்தாரா, அவரது காதல் கைகூடியதா என்பதே கதை.

நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி, இயல்பாக நடித்து இருக்கிறார். நாயகியின் காதலை உணர்ந்து நெகிழ்வது, சொல்லத் தயங்கி.. பிறகு வெளிப்படையாகச் சொல்வது, காதலி மறுத்தவுடன் மனம் குமைவது என கவர்கிறார். குறிப்பாக கூத்துகட்டி ஆடும் காட்சிகளில் கூடுதலாக ரசிக்க வைக்கிறார்.

நாயகி மனிஷா ஜித்… குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகுக்கு பரிட்சயமானவர்தான். நாயகியாக வந்து கவர்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் பிரச்சினையை நினைத்து வருந்தும் காட்சிகளிலும், சாமி சிலை முன் ஆக்ரோஷமாக பேசும் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் மாமாவாக வரும் மாரிமுத்து வில்லனாக மிரட்டுகிறார். கூத்துக்கலைஞராக வரும் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் அம்மாவாக வரும் உஷா எலிசபெத், ஊர்ப்பெரியவராக வரும் தவசி உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பை அளித்து கவர்கின்றனர். .

கிராமத்துக் காட்சிகளையும், கூத்து நிகழ்வு மேடையையும் நிஜமாக பார்ப்பதுபோல் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெய்சங்கர் ராமலிங்கம். செல்வ நம்பியின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

மிரட்டல் செல்வா, வீரா ஆகியோரின் சண்டைக் காட்சிகள் சிறப்பு. ஹரிஹரனின் படத்தொகுப்பு கச்சிதம்.

நிஜயமாகவே ஒரு கிராமத்துக்குச் சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது திரைப்படம். தவிர, நாயகன் நாயகி இடையேயான ஆத்மார்த்தமான காதலை சொன்ன விதத்திலும், நெகிழ்ச்சியான கிளைமாக்ஸிலும் ஈர்க்கிறது.

சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் , கதையை நம்பி உருவாகி உள்ள திரைப்படம்,

எது எப்படியோ ஜாதி,கலவரம், வன்முறை என்ற கோணலில் படம் பார்த்து சலித்து போன நமக்கு இவர்களின் புதுவிதமான முயற்சி பாராட்டலாம்.
Previous Post

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது

Next Post

200வது எபிசோட் ‘நினைத்தேன் வந்தாய்’தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்

Next Post

200வது எபிசோட் ‘நினைத்தேன் வந்தாய்’தொடர் ; உற்சாகத்தில் கணேஷ் வெங்கட்ராம்

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.