‘நகைச்சுவை மன்னன்’ கவுண்டமணி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 85 வயதிலும் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார். அதன்படி தற்போது அவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கி இருந்தார். சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார்.
மேலும், மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வையாப்புரி, சந்தனபாரதி மற்றும் சிங்கம் முத்து ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மேலும் யோகி பாபு கவுண்டமணி நடிக்க கூப்பிட்டார் என்பதற்காக நடித்திருக்கிறார் அவரும் தனக்கு உண்டான வேலையை கனக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.
சிங்கம் புலி, சென்ராயன், கூல் சுரேஷ் என்று ஒரு கும்பலாக வந்து அரட்டை அடித்து விட்டு செல்கிறார்கள்.
அரசியல் நக்கல் நையாண்டி வசனங்கள் பொறுமையாக ரசிக்க வைக்கிறது கவுண்டமணியின் கவனம் படத்திற்கு இனி தேவை இல்லை என்றே தோன்றுகிறது.
ரவி மரியா வரும் காட்சிகளிலும் சித்ரா லட்சுமண் வரும் காட்சிகளிலும் மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளிலும் வசனங்கள் இருந்தும் படத்தில் தொய்வு நன்றாகவே தெரிகிறது.
மொத்தத்தில் இந்த படம் பெரிய நடிகர்களின் கால்ஷீட் வீணானது தான் மிச்சம்.