வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 2K லவ் ஸ்டோரி.
சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்) – மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கி கல்லூரி, அதற்குப்பின் தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும், அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்துவிடுகிறார்கள்.
ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே பழக ஒரு கட்டத்தில் பவித்ரா என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார். பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நட்பில் கார்த்திக் நெருங்கி பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை.
தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. இதன்பின், கார்த்திக் – மோனிகா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது இறுதிவரை நண்பரகளாகவே இருந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.
இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அழகிய பயணத்தை பக்காவாக எடுத்துள்ளார்.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல் தான், என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு, ஒரு ஆணும், பெண்ணும் இறுதிவரை நண்பரகளவே இருக்கலாம் என காட்டியுள்ளார்.
நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு பெரிதாக ஒன்றும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் மட்டும் தோன்றுகிறது.
மேலும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது. பாலசரவணன், சிங்கம்புலி நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிங்கம்புலி கொடுக்கும் அலப்பறை அட்டகாசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
டி. இமானின் பாடல்கள் பின்னணி இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு, எடிட்டிங் பக்கா.
முத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் கசமுசா செய்து வாழும் நபர்களுக்கிடையே இந்த 2k லவ் ஸ்டோரி தனித்து நிற்கும்.