இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது.
எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.
இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.
ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, விஜயலட்சுமி, சித்ரா லக்ஷ்மணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் வசூலில் சக்கைப்போடு போட்டது.
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா. முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரிய வெற்றி பெற்றன.

இந்தப் படத்தை ராஜேஷ் எம் இயக்கியிருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘சிவா மனசுல சக்தி’ படமும் கூட மீண்டும் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்றது என்பது, அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வரிசையில் இப்போது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘படமும் வெளியாக உள்ளது.
அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் மறுவெளியீடாக இதை வெளியிடுகிறது. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்தப் படம் கோடைக்கால விருந்தாக தமிழ்நாடு முழுவதும் இம்மாதம் வெளியாகிறது.