ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

by Tamil2daynews
July 26, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக,  உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது.., கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ஜூலை 29 இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
நடிகர் சிபிராஜ் கூறியதாவது..,
வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது..,
“இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம்  முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்  இந்த சமூகத்தில் அதை விட  பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது..,
ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.
நடிகை அதுல்யா ரவி கூறியதாவது..,
எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கபட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்நக்கலைட்ஸ் சசி கூறியதாவது..,
எனக்கும் சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா கூறியதாவது..,
இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இந்த படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

ஜூலை 29  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “வட்டம்” நேரடி திரைப்படமாக வெளியாகிறது.
Previous Post

“பேப்பர் ராக்கெட்” டிரைலர் வெளியீட்டு விழா !

Next Post

அதிரடியில் இறங்கிய Sony LIV தளம்..!

Next Post

அதிரடியில் இறங்கிய Sony LIV தளம்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • “அஷ்டகர்மா” திரைவிமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகர் சாம் ஜோன்ஸ்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

August 12, 2022

அடுத்த மாதம் அதிரடியாக ரிலீஸ் ஆகும் “கணம்”..!

August 10, 2022

சோனி லிவ் தனது உன்னத தமிழ் படைப்பான தமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.

August 10, 2022

தனுஷ் என்கிற The Lone Wolf கிரே மேன் இரண்டம் பாகத்தில் வெளிவரப்போகிறது

August 10, 2022

புதையலில் கிடைத்த புத்தர் சிலை, ரஜினிகாந்திடம் ஒப்படைப்பு ..!

August 9, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.