• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சங்கராந்தி கொண்டாட்டத்தில் பான் இந்தியா படமாக வரும் ‘ஏஜெண்ட்’..!

by Tamil2daynews
October 27, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சங்கராந்தி கொண்டாட்டத்தில் பான் இந்தியா படமாக வரும் ‘ஏஜெண்ட்’..!

 

இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம்  ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் திரைப்படமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக  திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இப்படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாப்பாத்திரத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக்கொண்ட விதம் நம்மை வியக்க வைக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு குறித்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்று கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது.
டீசரில் காட்டப்பட்ட அகிலின் அதிரடி ஆக்சன் பாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான டீசரை அடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு  பெருமளவில் அதிகரித்துள்ளது.
அகிலின் காதலியாக சாக்‌ஷி வைத்யா நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரசூல் எல்லோர், ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.
இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தை அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
Previous Post

தஞ்சையின் சாதனைப் பெண்ணை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

Next Post

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.