• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

by Tamil2daynews
March 5, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

 

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு,  இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து,  கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார்.

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடிக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி.G ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் பங்குபெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Previous Post

வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

Next Post

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

Next Post

'நேச்சுரல் ஸ்டார்' நானி - ஸ்ரீகாந்த் ஓடெலா - சுதாகர் செருகுரி - SLV சினிமாஸ் - கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.