• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

by Tamil2daynews
July 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

 

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது.  பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) –  தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது.‌

இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், ” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம்.‌ கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்-  மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் புதிய தேசிய அளவிலான பிரம்மாண்டமான வெற்றியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வலிமையான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்” என்றார்.
சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.

தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது. அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான ‘காட்டேரா’ எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது.  ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ ‘திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் – ஆசிப் அலி நடித்த ‘2018’ எனும் திரைப்படம் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி – ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல்- தி கோர் ‘ எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம்.

Previous Post

வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

Next Post

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது…

Next Post

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்… எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது…

Popular News

  • ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • 5, மற்றும் 8வது வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையா? இயக்குனர் பேரரசு பரபரப்பான அறிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.