• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

by Tamil2daynews
June 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”. 

 

ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்சனைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் கே. பாக்யராஜ் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார் .

அப்போது தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றி கேள்விப்பட்டு தன் குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மகரிஷி அவர்கள் உருவாக்கிய மனவளக்கலை என்ற எளிய முறை யோகப்  பயிற்சிகளை கற்று,  அதன் மூலம் எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்ற சூட்சமத்தை  உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியான, மன அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தில், கே. பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடிகண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் ஆகியோருடன் ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அன்பர்களும் நடித்திருக்கிறார்கள்.
“ஆனந்த வாழ்க்கை” என்ற இத்திரைப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், பெங்களூரு இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும் (INNOVATIVE  FILM ACADEMY) இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்பட போட்டியில் “பாஞ்சாலி” என்ற குறும் படத்திற்காக முதல் பரிசு வென்றவர். இவர் தற்பொழுது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

#கேங்கர்ஸ் மற்றும் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த சத்யா.C . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு K.கோகுல், எடிட்டிங் சிவராஜ், புரோடக்க்ஷன் மேனேஜர்  M.உதயகுமார், ஒலிப்பதிவு A.கஜபதி, DI.கார்த்தி, இணை இயக்கம் ராமு மா.சே. ஒருங்கிணைப்பு  குரு அரங்கதுரை, மக்கள் தொடர்பு ஜான்சன், டிசைன் NV.அகிலன் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி.CEO.திரு.P. முருகானந்தம் கவனிக்கிறார்.
  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு, பத்மஸ்ரீ. திரு. SKM.மயிலானந்தம்  வழிகாட்டுதலின்படி இத்திரைப்படத்தை ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம்  தயாரித்திருக்கிறது.
Previous Post

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர்!!

Next Post

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

Next Post

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் 'ப்ரோகோட்- (BroCode)'

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.