• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

by Tamil2daynews
June 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘ ப்ரோகோட்- (BroCode)’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.  படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.
Imageபடத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் ” என்றார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திர நடிகைகள் யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி ‘ மற்றும் இயக்குநர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”.

Next Post

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

Next Post

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.