• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வீரபாண்டியபுரம் – திரை விமர்சனம்

by Tamil2daynews
February 20, 2022
in சினிமா செய்திகள், விமர்சனம்
0
பிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.
இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெய்யின் தோற்றம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நியாபகப்படுத்துகிறது. நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் பாலசரவணன். ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தானா இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்ற ஆச்சரியம் பார்வையாளர்களுக்கு எழுகிறது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே பலமுறை பார்த்த பழிவாங்கும் கதையை தூசி தட்டி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கும் ஜெய்க்கு பாராட்டுகள். ஆனால், இவரது இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. அஜிஸின் பின்னணி இசை படத்திற்கு பலம். திண்டுக்கல் சுற்றுவட்டார கிராம அழகை தனக்கே உரிய பாணியில் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
Previous Post

Kollywood celebrities shower praises on ZEE5 Original Series ‘VILANGU’ at the special screening!

Next Post

“அன்சார்டட்” – திரை விமர்சனம்.

Next Post
பிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

"அன்சார்டட்" - திரை விமர்சனம்.

Popular News

  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.