• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’*

by Tamil2daynews
January 6, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரையுலகில் 25வது ஆண்டில் நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’

 

‘திருநெல்வேலி’ திரைப்படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர்  உதயா, கலைப்பயணத்தில் தனது வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக ‘அக்யூஸ்ட்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
Imageமருதநாயகம் ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல். பிரவீன் படத்தொகுப்பை கையாளுகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா ஆக்ஷன் காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்கம்: ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும், பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் ஜனவரி 2 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பு சங்கம் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் நிறைவு செய்து 2025 கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Previous Post

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன்..!!

Next Post

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.