• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.

by Tamil2daynews
November 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது.

 

சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”, அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து  அடுத்த பான்-இந்திய பிரம்மாண்ட படமாக, மீண்டும் ஒருமுறை  உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைக் கவர தயாராக உள்ளது இப்படம்.

பிரம்மாண்டமான மற்றும் மண்சார்ந்த சினிமா அனுபவங்களுக்கு பெயர் பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ், மீண்டுமொருமுறை  தலைசிறந்த காட்சியனுபவத்தை தரவுள்ளது. படக்குழு குந்தாப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடம்பப் பேரரசை மீண்டும் உருவாக்கி, பார்வையாளர்களை வீரம், கலாச்சாரம் மற்றும் மர்மம் நிறைந்த சகாப்தத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்திற்கு பார்வையாளர்களை கூட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அற்புதமான படைப்பினை இயக்கி நடித்திருக்கும், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறார்.  ரிஷப் தனது கதாபாத்திரத்தை உண்மையாக சித்தரிக்க, கேரளாவில் இருந்து தோன்றிய பழமையான தற்காப்பு கலை வடிவங்களில் ஒன்றான களரிபயட்டில் கடுமையான பயிற்சி பெற்றார். கலையில் தேர்ச்சி பெறுவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரது நடிப்புக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்த்து, அவரது பாத்திரத்தை  பாரம்பரியமிக்கதாகவும், உண்மையானதாகவும் ஆக்கியுள்ளது.

கொங்கன் நாட்டுப்புற வாழ்வியலின்  செழுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது காந்தாரா: பாகம் 1. அதன் கவர்ச்சியான கதை, மூர்ச்சடைய வைக்கும் காட்சிகள் மற்றும் இதயப்பூர்வமான நடிப்பால், படம் இந்திய எல்லைகளுக்கு அப்பால் பார்வையாளர்களை கவரந்தது. உள்ளூர் மரபுகளை மிக அழுத்தமான கதைசொல்லலில் உண்மையாக சித்தரித்த இப்படம், உலகளாவிய ரசிகர்களை ஈர்த்து, ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியது.

காந்தாரா: அத்தியாயம் 1 படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட உருவாக்கம், ரிஷாப் ஷெட்டியின் அர்ப்பணிப்பு மற்றும் முதல் அத்தியாயத்தின் மீதான ஈர்ப்புடன், இந்தப் படம் திரையுலகில் இன்னொரு மைல்கல்லாக மாற உள்ளது.

Previous Post

வணங்கான் படத்தின் மூலம் இப்படி ஒரு வாய்ப்பா, பாலாவுக்கு நன்றி சொன்ன அருண் விஜய்..!

Next Post

இந்த ஜாலாக்கெல்லாம் என்கிட்ட வேண்டாம், நயன்தாராவுக்கு தனுஷ் பதிலடி..!

Next Post

இந்த ஜாலாக்கெல்லாம் என்கிட்ட வேண்டாம், நயன்தாராவுக்கு தனுஷ் பதிலடி..!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.