இந்த ஜாலாக்கெல்லாம் என்கிட்ட வேண்டாம், நயன்தாராவுக்கு தனுஷ் பதிலடி..!
நான் தயாரித்த படத்தில் உங்களுக்கு காதல் அரும்புகிறது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதற்குப் பிறகு உங்கள் தற்போதைய கணவர் அப்போதைய என் இயக்குனர், உங்கள் புது காதலர் படத்தை முடிப்பதற்கு எவ்வளவு தாமதம் செய்தார் என்பது உங்களுக்குத் தெரியாததா? அதனால் எனக்கு ஏறத்தாழ பத்து கோடிக்கு மேல் பட்ஜெட் எகிறியது.
ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஒரு பைசா கூட நான் செலவு செய்ய மாட்டேன் என்று நான் உறுதியாக நின்றவுடன், நீங்கள் உங்கள் பணத்தை செலவு செய்து அந்தப் படத்தை முடிப்பதற்கு முயற்சி செய்தீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?
போகட்டும். உங்கள் கல்யாணத்துக்கு எத்தனையோ பேரை அழைத்தீர்கள். என்னை அழைத்தீர்களா? ஏன் அழைக்கவில்லை. சரி விடுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.
இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு NOC வேண்டும். அதை உங்கள் இருவரில் யாராவது ஒருவர் முறையாக என்னிடம் பேசினீர்களா?
என் நண்பரிடம் எனக்கே தெரியாமல் ‘ஒரு NOC மெயில் அனுப்பிவிடுங்கள்’ என்று விக்னேஷ்சிவன் கேட்டிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?
இப்போது அனுமதியின்றி நீங்கள் பயன்படுத்திவிட்டு, அதற்கு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பிய என்னை குற்றவாளி ஆக்கி ஏதேதோ ஜெர்மானிய வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி guilt ஆக்கப் பார்க்கிறீர்கள்.
ஒரு சின்ன வீடியோ துணுக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுப்பதில் எனக்கு என்ன ஆனந்தம் வந்துவிடப் போகிறது.?
பிரச்சனை NOC இல் இல்லை. அது முறையாக கேட்கப்படவில்லை என்பதில் தான்.
எவ்வளவோ பார்த்துவிட்டேன். இந்த ஜாலக்கான லெட்டர் என்னை என்ன செய்துவிடும் ? பார்க்கலாம். நல்லா இருங்கள்.
spread love! ராகவேந்திராய நமஹ !