

நடிகை நந்திதா தாஸ், இது குறித்து பகிர்ந்து கொண்டதாவது…
“எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்ப முடியவில்லை. படத்தின் நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. என்னை இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடிக்க வைத்ததற்காக, இயக்குநர் தங்கர் பச்சானுக்கு நன்றி. அதே போல் உடன் நடித்த அற்புதமான நடிகர்கள் பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே மற்றும் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான பாடல்களையும்.. இசையையும் தந்ததற்காக நன்றி. மீண்டும் “அழகி 2” எடுக்கப்பட்டு, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நன்றி.!!”
இவ்வாறு வாழ்த்து வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.