• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பான் இந்தியப் பிரம்மாண்டம் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !!

by Tamil2daynews
January 6, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பான் இந்தியப் பிரம்மாண்டம் “அகத்தியா” படத்தின் அதிரடி  டீசர் வெளியாகியுள்ளது !!

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும்  எதிர்பார்ப்பிலிருக்கும்  “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது.  பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்த டீசர் அகத்தியா திரைப்பட  மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில்  ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.

“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில்,  திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை,  புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
Image
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ், படம் குறித்துக் கூறியதாவது…
“ஃபேண்டஸி-திகில் வகை ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக வசீகரித்து வருகிறது. –  நமது கலாச்சாரத்தினை மிக ஆழமாகப் பிரதிபலிக்கும் அதே வேளையில், மிகவும் பிரபலமான உலகளாவிய பிளாக்பஸ்டர்களுக்கு போட்டியாக, ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த படம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

முன்னணி நடிகர் ஜீவா இப்படம் குறித்துக் கூறியதாவது…
“ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை,  காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது.   பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும்  கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக  இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்லும்.

முன்னணி நட்சத்திர நடிகை ராஷி கண்ணா கூறியதாவது…
“நான் ஸ்கிரிப்டைக் கேட்ட கணம், கதையின் பிரம்மாண்ட உலகைக் கேட்டுச்  சிலிர்த்துப் போனேன். அகத்தியா நான் முன்பு செய்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், அசத்தலான காட்சிகள் மற்றும் நம்பமுடியாத இசை, பிரம்மாண்ட புதிய உலகம் எனப்  பார்வையாளர்களைக் கண்டிப்பாகக் கவரும்  என்று நம்புகிறேன்.

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட , தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான   வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்),  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, மகத்தான படைப்பான “அகத்தியா” திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.

சினிமா ஆர்வலர்களே தயாராகுங்கள், ஒரு முழுமையான ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்துச் செல்லும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான  அகத்தியா திரைப்படம், ஜனவரி 31, 2025 அன்று வெளியாகிறது.

Teaser – https://youtu.be/BZxcNTD4kss
Previous Post

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

ஈரானிய படங்களுக்கு நிகராக தமிழில் உருவாகியுள்ள ‘ஹபீபி’

Next Post

ஈரானிய படங்களுக்கு நிகராக தமிழில் உருவாகியுள்ள ‘ஹபீபி’

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.