• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருதுக்கான பட்டியலில் ‘அனல்’அரசு அவர்கள் பணியாற்றிய ‘ஜவான்’திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

by Tamil2daynews
April 19, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சண்டைப் பயிற்சிக்கான சர்வதேச விருதுக்கான பட்டியலில் ‘அனல்’அரசு அவர்கள் பணியாற்றிய ‘ஜவான்’திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

 

தென்னிந்தியாவின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குனர்களில் ஒருவர் ‘அனல்’அரசு ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிங்கம்-1,சிங்கம்-2, கத்தி, மெர்சல்,பிகில் உள்பட பல படங்களில் பணியாற்றியவர் மற்றும் அடுத்து வெளியாக உள்ள இந்தியன்-2 போன்ற மிகப்பெரிய படங்களில் பணியாற்றி உள்ளார். அதே போல மலையாளத்தில் உருமி, காம்ரேட்-இன்-அமெரிக்கா, ஷைலாக் மற்றும் தெலுங்கில் மிர்ச்சி,ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியில் ரவுடி ரத்தோர்,தபாங்-2,தபாங்-3,சுல்தான்,ரேஸ்-3, சமீபத்திய மெகா ஹிட் திரைப்படமான ‘ஜவான்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதோடு, தானும் ஒரு இயக்குனராக ‘பீனிக்ஸ்[வீழான்]’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
இவர் ஏற்கனவே பணியாற்றிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, ஆனந்த விகடன் விருது,விஜய் டிவியின் விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது(SIIMA)விருது,V4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமி விருது,தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க விருது,நார்வே தமிழ் திரைப்பட விழா விருது, சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது போன்ற விருதுகளையும் சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ‘பாலிவுட் பாட்ஷா’  என்றழைக்கப்படும் ‘ஷாருக்கான்’ நடிப்பில், ‘அட்லி’ இயக்கத்தில், ‘அனிருத்’ இசையில்,’அனல்’அரசு அவர்கள் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய  ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான  விருதுகளையும் வென்றிருக்கிறார்.சமீபத்தில் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2024-லும்,ஜீ சினி விருதுகள் 2024-லும் விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு ‘ஆஸ்கர் விருது’ போன்ற ஒரு விருதான ‘டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது’களுக்கான(Taurus World Stunt Awards) பட்டியலில் ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் ‘ஜவான்’  திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருது மட்டும் அவருக்கு கிடைத்தால், அவரது மணிமகுடத்தில் ஒரு வைரமாக மாறும்.

Previous Post

‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது

Next Post

தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!

Next Post

தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.