• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸாகும் நாயகன்

by Tamil2daynews
October 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸாகும் நாயகன்

 

எண்பது தொண்ணூறுகளில் வெளியான படங்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும்போதும் கூட அந்த படங்கள் வெளியான சமயத்தில் பெற்ற அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் இதுபோன்ற படங்களை பார்க்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, சிவாஜி தி பாஸ், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியானபோது இன்றைய இளைஞர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் விரைவில் கமலின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு 1987ல் அவர் நடித்த நாயகன் திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த படத்தை தற்போது டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்கிறது SR பிலிம் பேக்ட்ரி நிறுவனம். இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமையை ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில், பி.சி.ஸ்ரீராமின் அழகியல் ஒளிப்பதிவில் ஒரு மிகப்பெரிய கல்ட் கிளாசிக் படமாக நாயகன் வெளியானது. சிறந்த நடிகர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம் இன்றளவும் இதுபோன்று கல்ட் கிளாசிக் படங்களை இயக்க விரும்பும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடப்புத்தகமாகவே திகழ்கிறது.

டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாக உள்ள நாயகன் படம் குறித்து, தனது ஏடிஎம் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தரான மதுராஜ், நடிகர் அரீஷ்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
Nayakan (1987) | Art House Cinema

மதுராஜ் கூறும்போது, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு  திரையரங்குகளில் வெளியானபோது, பொதுமக்கள் பலர் நாயகன் படத்தையும் இதேபோன்று டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதனால் வரும் நவம்பர் மாதம் மாதம் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை (நவ-7) முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி இந்த படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்கிறோம்.

மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் படங்களுக்கு இன்றைய இளைஞர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பும் வியாபாரமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் சமயத்திலும் அந்த வரவேற்பு எதிரொலித்தது. கிட்டத்தட்ட 25 நாட்கள் அந்த படம் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் ஓடியது. அதனால் நாயகன் படத்தை கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்வது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

இந்த படத்தில் இருந்து ஒரு துளி அளவு கூட எந்த விஷயத்தையும் நாங்கள் மாற்றவில்லை. ஏனென்றால் அவ்வளவு சிறந்த படத்தை கெடுத்து வைத்துவிட்டார்கள் என்கிற பெயர் வந்துவிட கூடாது. அதேசமயம் இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்த படம் துல்லியமாக கலர் கரெக்சன் மேற்கொள்ளப்பட்டு 7.1, 5.1, டால்பி அட்மாஸ் என்கிற ஒலி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்போது நாயகன் படம் பார்த்தவர்களுக்கு கூட இப்போது பார்த்தால் இன்னும் புதிதாக தெரியும்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் வைரலானது. படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இதன் டிரைலரை வெளியிட இருக்கிறோம். இதற்காக உலக நாயகன் கமல்ஹாசனை அணுகவும் இருக்கிறோம். இயக்குனர் மணிரத்னமும் புரமோஷனுக்கு உதவினால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் நாயகன் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து இதுபோன்று இன்னும் சில படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் எண்ணமும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல நாயகன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேசமயம் பில்லா படம் ரீமேக் செய்யப்பட்டபோது எப்படி இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளப்பட்டதோ அதேபோன்று நாயகனும் புதிய வடிவத்தில் ரீமேக் செய்யப்படும்.

நாயகன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்படுவது குறித்து நடிகர் அரீஷ் குமார் கூறும்போது, “நாயகன் படத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது வயதைம் பிரதிபலிக்கும் விதமாக நான்கு விதமான தோற்றங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அற்புதமாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 வயதிலேயே அதுபோன்ற புதிய விஷயங்களை அவர் தைரியமாக மேற்கொண்டார் அது என்னைப்போன்ற இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு நடிகன் இவ்வளவு உழைத்திருக்கிறான் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Previous Post

விஷாலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்.. இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்.!!

Next Post

யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யிலிருந்து ‘லேகே பிரபு கா நாம்’ என்கிற சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடனமாடியுள்ள முதல் பாடலின் அதிர்வை ஏற்படுத்துக்கூடிய டீசரை வெளியிட்டுள்ளது

Next Post

யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யிலிருந்து ‘லேகே பிரபு கா நாம்’ என்கிற சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடனமாடியுள்ள முதல் பாடலின் அதிர்வை ஏற்படுத்துக்கூடிய டீசரை வெளியிட்டுள்ளது

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.