• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

by Tamil2daynews
November 8, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

 

திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கொடுத்து உண், பாத்திரம், கற்க தோள் கொடு, கல்வி காடு, 250 ஹேண்ட்ஸ் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களுக்கான அடிப்படை தேவைகள் முதற்கொண்டு செயல்படுத்துவது, தினமும்  ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் வழங்குவது, கல்விக்காடு திட்டங்களின் மூலம் கல்வி குறித்த பல விஷயங்கள் பெரிதளவு சென்று சேராத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் வரை சென்று சேர்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர். இப்படி பல திட்டங்களை செய்லபடுத்தி வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கடந்த 12 வருடங்களாக சிறார் தீபாவளி என்ற நிகழ்வை முன்னெடுத்து வருகின்றனர். இதில் பல குழந்தைகளுக்கு புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு மற்றும் அவர்களுக்கான சிறப்பு உணவுகள் என தீபாவளிக்கு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றனர். இத்தனை வருடங்கள் கடந்து இந்த 12வது வருடத்தில் அரசு காப்பக குழந்தைகள், தொண்டு நிறுவன குழந்தைகள், குடிசை வாழ் பகுதி குழந்தைகள், குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் என 16 இல்லத்தில் இருந்து வந்திருந்த ஆதரவற்ற, சிறப்பு குழந்தைகளுடன் பிஎஸ்ஆர் டிரஸ்டின் ‘சிறார் தீபாவளி-2023’ மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
Imageஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஹரிஷ் கல்யாண், MMM முருகானந்தம், அன்பில் பவுண்டேசன் டிரஸ்டி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் மனைவி ஜனனி மகேஷ், தென்னக ரயில்வேயின் வணிக பிரிவு மேலாளர் செல்வி. மோகனப்ரியா IRTS, திருச்சி கிழக்கு திமுக செயலாளர் திரு.எம்.மதிவாணன், நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் Dr. D. பிரசன்ன பாலாஜி, குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர். பி.மோகன், எங் இந்தியன்ஸ் திருச்சி சாப்டர் சேர்மேன் திரு.பி.அசோக் ராமநாதன்,  திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பி.ராகுல் காந்தி, பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிதி அறங்காவலர் Dr. D. குணசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தீபாவளி பரிசினை வழங்கியதுடன் பிஎஸ்ஆர் டிரஸ்ட் முன்னெடுத்துள்ள குழந்தைங்களுக்கான இப்பெரிய நிகழ்வை ஆச்சரியத்துடன் பாராட்டினர்.
Imageமேலும் நிகழ்ச்சி குறித்து பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு. ஷேக் அப்துல்லா பேசுகையில் 12ஆம் வருட சிறார் தீபாவளி நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, இந்த வருடம் 1000 குழந்தைகளின் முகத்தில் புன்னகை மத்தாப்பை பார்த்த நாம், அடுத்த வருடத்தில் இன்னும் மிக பெரிதாக 5000 குழந்தைகளின் முகத்தில் காண்போம் என்று கூறி நெகிழ வைத்தார்.
Previous Post

நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படம் பற்றி சிறப்பு பேட்டி

Next Post

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்

Next Post

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்

Popular News

  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.