• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!

by Tamil2daynews
October 3, 2023
in சினிமா செய்திகள்
0
“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!

 

பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார். அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது  வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு ‘ரத்தம்’ நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார்.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது,
“சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும்  அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என்றார்.

இந்த படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றி விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்” என்றார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.

Previous Post

எஸ்குவேர் புரொடக்ஷன்ஸ் யுகே & புன்னகை பூ கீதா வழங்கும், இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’!

Next Post

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !!

Next Post

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்திய திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அனல் பறக்கும் டிரெய்லர் வெளியானது !!

Popular News

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.