ஃபயர்(Fire) – விமர்சனம் ரேட்டிங் 3 / 5
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் JSK சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபயர் . காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது. ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, சி எஸ் பிரேம்குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை JSK சதீஷ் தயாரித்தும் இயக்கியும் நடித்தும் உள்ளார்.
ஃபயர் படும் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவிலில் காசி என்ற இளைஞர் பல இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சிறையில் இருக்கும் காசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் JSK சதீஷ்.

இவர்களை தாண்டி படம் முழுக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தாண்டி சிங்கம் புலி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நபர்களை பற்றி எடுத்துச் சொல்லும் படமாக ஃபயர் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக படம் அமைந்துள்ளது. என்ன தான் படத்திற்கு A சர்டிபிகேட் என்றாலும் படத்தில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் நிறைந்துள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பற்றி பேச வேண்டிய படம் அதனை மறந்து ஆபாச காட்சிகள் நிறைந்த படமாக உள்ளது.
அதேபோல நிறைய இடங்களில் நடிகர்கள் அனைவரின் நடிப்பும் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருந்தது. இதுவும் படத்திலிருந்து நம்மை ஒன்றவிடாமல் செய்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இசை படத்திற்கு ஏற்றது போல அமைந்துள்ளது. பெண்களுக்கு ஆதரவாக பேசப்பட்டிருக்க வேண்டிய இந்த கதையில் இன்னும் காட்சிகளை அழுத்தமாக வைத்திருந்திருக்கலாம். படத்தில் ஒருசில காட்சிகள் நன்றாக இருந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் ரச்சிதாவின் வாழ்க்கை, ஆபாச படங்களை எப்படி மறைத்து வைக்கின்றனர், கிளைமாக்சிக்கு முந்தைய விசாரணை காட்சிகள் ஆகியவை நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது. இதே போல சுவாரஸ்யமாக மற்ற காட்சிகளும் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பான படமாக பயர் அமைந்து இருக்கும்.