• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

by Tamil2daynews
August 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சிங்கா’: இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்

 

இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ‘சிங்கா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் ‘சிங்கா’ திரைப்படத்தில் ‘லெனின் பாண்டியன்’, பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் ‘சிங்கா’, வி. மதியழகன் தயாரிக்கும் 14வது படமாகும். இதற்கு முன் ‘அப்பா’, ‘கொலையுதிர் காலம்’, ‘மகா’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘சாமானியன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி வரும் கே.சி. ரவிதேவன் கூறுகையில், “சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, அவர்களுக்கு கதை பிடித்திருந்த போதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்ததோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

இப்படத்தில் உள்ள ஒரு எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். ‘1945’, ‘பொதுநலன் கருதி’ மற்றும் ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
Imageமலேசியா, சிங்க‌ப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்ப‌ட்டினம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொழிகளைக் கடந்த கதை இது என்பதால், ‘சிங்கா’ படத்தை பான்‍-இந்தியா திரைப்படமாக எடுத்து வருகிறோம். இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.

‘சிங்கா’ திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, வசனங்களை கண்ணன் செல்வராஜ் எழுதுகிறார். ஒளிப்பதிவுக்கு பி.ஜி. முத்தையா, கலை இயக்கத்திற்கு ஹாசினி பவித்ரா, படத்தொகுப்புக்கு தமிழ் அரசன், சண்டைப் பயிற்சிக்கு ஸ்டன்னர் சாம், மக்கள் தொடர்புக்கு நிகில் முருகன் பொறுப்பேற்றுள்ளனர். உடைகள் வடிவமைப்பு: தக்ஷா தயாள்; சிஜி: பிக்சல் ஆர்ட்ஸ்; ஸ்டில்ஸ்: முத்துக்குமார் எஸ்; பாடல்கள்: விவேகா, பா. விஜய்; நடனம்: ஷோபி பால் ராஜ், ஈஷ்வர் பாபு, ரகு; வர்த்தக நிர்வாகி: உமாபதி ராஜா; தயாரிப்பு நிர்வாகி: வி. பாக்யராஜ்; பப்ளிசிட்டி டிசைன்: டிவென்டி.ஒன்.ஜி.

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் ‘சிங்கா’ வேகமாக வளர்ந்து வருகிறது.

Previous Post

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்.. ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை’ ; ‘ஆட்டி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசம்

Next Post

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Next Post

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Popular News

  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.