• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.

by Tamil2daynews
December 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.

 

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா… இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பு நீண்ட நாட்களை கொண்டதாக இருக்கும் என்றும், இதில் முன்னணி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இதனை தவிர்த்து அதிரடியான சண்டைக் காட்சிகளையும், சாகச காட்சிகளையும் படமாக்கப்படவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் நானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
Imageஇந்தத் திரைப்படம் தொடர்பாக இதற்கு முன் வெளியிடப்பட்ட ‘Unchained’ எனும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதைப் போல் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.‌ முரளி. ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை ராம்- லக்ஷ்மன் அமைக்கின்றனர்.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.‌

Previous Post

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

Next Post

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது!

Next Post

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் 'மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா'- வெளியாகியுள்ளது!

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.