• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

by Tamil2daynews
July 1, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

 

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.

“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.
இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.

“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.

இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Previous Post

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா

Next Post

”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

Next Post

”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

Popular News

  • கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “சிக்னல் அட் 11.30′ படத்தில் சர்ப்ரைஸ், எமோஷன், எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் இருக்கும்”- இயக்குநர் மலர்விழி நடேசன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘நிறம்’ நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

November 26, 2026

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

November 26, 2026

ரசிகர்களுக்கு சிறந்த திரையனுபவத்தைத் தரும் திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30′” – இசையமைப்பாளர் டி. இமான்!

November 26, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது!

November 26, 2026

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்!

November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

November 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.