• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!

by Tamil2daynews
February 1, 2025
in சினிமா செய்திகள்
0
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும்,  “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும்,  “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும்  “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் “தி கம்ப்ளீட் ஆக்டர்” மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு  பிரம்மாண்ட சினிமா அனுபவமாக  உருவாகியுள்ளது.  இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று கொச்சியில் விமரிசையாக  நடைபெற்றது, இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.https://youtu.be/AYzSvao5RbQ

டீஸர் வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட நகரமான “காரகோஷ்” என்ற இடத்தில் துவங்குகிறது.  இதில் ஸ்டீவன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரம், ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த கூலிப்படை வெற்றிக் குழுவிற்கு தலைமை தாங்கும் அபிராம் குரேஷி என்ற இருண்ட மற்றும் புதிரான பக்கத்தைக் கொண்ட மீட்பரை அறிமுகப்படுத்துகிறது. படம் மோகன்லால் பாத்திரத்தை அதிரடி ஆக்சனுடன் ‌பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்துகிறது.  அரசியல் மற்றும் கூலிப்படைகளின் உலகத்தில் நிலவும்  அதிகாரம், துரோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை இப்படம் ஆராய்கிறது.
சுபாஸ்கரன் அவர்களால் துவங்கப்பட்டு,  ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களால் தலைமையேற்று வழிநடத்தப்படும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பெரிய பட்ஜெட் மற்றும்  சிறந்த உள்ளடக்கம் சார்ந்த படங்களை வழங்குவதில், பெயர் பெற்ற ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனமாகும்.  மலையாள திரையுலகில் அறிமுகமாகும் விதமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ், பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, “L2: எம்புரான்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
L2E: எம்புரான் படத்தை  முரளி கோபி  எழுதியுள்ளார், தீபக் தேவ் இசையமைத்துள்ளார் மற்றும் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பை கையாண்டுள்ளது, மோகன்தாஸ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

L2E: எம்புரான் திரைப்படம், மார்ச் 27, 2025 அன்று மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது

Previous Post

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

Next Post

ராஜ பீமா – விமர்சனம் ரேட்டிங் 3 / 5

Next Post

ராஜ பீமா - விமர்சனம் ரேட்டிங் 3 / 5

Popular News

  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.