• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

‘கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ‘ காயல் பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்.

by Tamil2daynews
August 12, 2025
in Uncategorized
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ‘ *காயல்* பட விழாவில்  தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்.

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில்  லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.விழாவில்   இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்துவருவதால்  கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை.

இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம் தயாரிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது.அப்படி துவங்கப்பட்டதுதான் காயல் திரைப்படம்.நடிகர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை இன்றுதான் பார்க்கிறேன்.ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானாக வந்தடையும் , இந்தக்கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது . இந்த காயல் திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்ப்பை பெரும் என்று நம்புகிறேன் என்றார்.

விழாவில் பேசிய இயக்குனர் தமயந்தி  இந்தக்கதை எனது வாழ்வில் நடந்த கதைதான்.சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் ஆண்கள் பக்கம் மட்டுமே அதிகம் இருப்பதைப்போன்று திரைப்படங்களும் , படைப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் உண்மையில்  பெண்களிடம் மிக மிக அதிகம் இருக்கின்றது.  காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திசெல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர் பெண்கள் .அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் காயல். இந்தக்கதை திரைப்படமாவதற்கு தயாரிப்பதற்கு முன்வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களுக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும்.
படத்தின் கதாநாயகன் லிங்கேஷ்,  அனுமோல், காயத்ரி, ஸ்வாசகா, ஐசக் , ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தில் சிறப்பானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள். என்றார்.
விழாவில் பேசிய நடிகர் லிங்கேஷ் இந்தப்படம் மிக முக்கியமான படம் எனது கேரியரில் , கதாநாயகனாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யும்பொழுதே இந்தப்படம் என்னமாதிரியான அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தும், நமது பங்களிப்பு இந்தபடத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இயக்குனர் தமயந்தி அவர்கள் இந்தக்கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். அதுவும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன்.ஒரு பொறு ல் ப்பான படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது என்றார்.
விழாவில் பேசிய நடிகை அனுமோல்.
தமயந்தி இந்த கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு  முன்னாடியே சொல்லிவிட்டார்,
அப்போது நான் மலையாளப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன்.  அப்போதே நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் நான் கண்டிப்பாக  நடிக்கிறேன் என்று.  அதன்பிறகு சொன்னதைப்போலவே படம் துவங்கும் நேரத்தில் சொன்னதுபோல நடிக்க வந்துவிட்டேன். பெரும்பாலும் படப்பிடிப்பு கடற்கரை ஒட்டிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் எங்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் ஒரு பயணம் செய்யும் அனுபவத்தை தந்தது.
இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் அதைவிட இப்படி பெண்களின் உண்மையான மனங்களில் இருக்கும் இன்னொரு பக்கத்தை சொல்ல துணிந்து சொல்லியிருக்கும் இயக்குனர் தமயந்திக்கு எனது பாராட்டுக்கள்.

என்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கிமருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகை ஸ்வாதகா, நடிகர் ஐசக், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Previous Post

யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

Next Post

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

Next Post

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்மேன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.