• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3க்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் புதிய பெப்பி பாடல், ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

by Tamil2daynews
August 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3க்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் புதிய பெப்பி பாடல்,  ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது

 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான  “கனா காணும் காலங்கள்” சீரிஸின் மூன்றாவது சீசனை, ஆகஸ்ட் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தத் சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதியை, இந்த சீரிஸில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பங்கு பெற்ற  ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்’ எனும் அட்டகாசமான பெப்பி பாடலை வெளியிட்டு, அறிவித்துள்ளது.

கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு – AJ திப்பு, நடன இயக்கம் – அப்சர். ஃபுளூட் நவின் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சீரியல்  பார்வையாளர்கள் மீது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் புரிந்துகொண்ட டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏப்ரல் 22, 2022 அன்று அதன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், பிரபலமான டிவி சீரியலை மீண்டும் ஒரு சீரிஸாக வழங்கியது.

இந்த சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மற்றும் அதிக எபிசோட்களை வேண்டிய ரசிகர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, சூப்பர்ஹிட் சீரிஸின் இரண்டாவது சீசனை வெளியிட்டது.

இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரிஸின், மூன்றாவது சீசனை வெளியிடுவதாக அறிவித்தது.

முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த மூன்றாவது சீசன், ரசிகர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு அருமையான கதையுடன், அவர்களின் வாழ்வை படம்பிடித்து காட்டவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
Previous Post

மெல்போர்னில் நடந்த இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவலில் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ‘சிறந்த இயக்குந’ருக்கான விருதை வென்றிருக்கிறார்!

Next Post

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா

Next Post

'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.