• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!

by Tamil2daynews
January 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!

 

தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் புரோமோக்களில் நடிகை ஏமி ஜாக்சனின் ஆக்‌ஷன் அவதாரம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நடிகை ஏமி பகிர்ந்துள்ளார்.

ஏமி ஜாக்சன் கூறியிருப்பதாவது,
“இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் எனக்கு முக்கியமான பாத்திரங்களைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், ‘மிஷன் சாப்டர் 1’ சந்தேகத்திற்கு இடமின்றி எனது கரியரில் முக்கியமான படமாக இருக்கும். பெரும்பாலான இயக்குநர்கள் என்னை ஒரு அழகான காதல் கதாநாயகியாகதான் பார்த்துள்ளனர். அதனால், எனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் வழங்கப்படும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. இருப்பினும், விஜய் ஸ்கிரிப்டை விவரித்து, என் போலீஸ் கதாபாத்திரத்தை சொன்னவுடன் அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. உடனடியாக அந்த பாத்திரத்திற்கு தயாராகத் தொடங்கினேன். ஆக்‌ஷன் தளத்தில் நான் இயங்குவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. மேலும், இது எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் என உறுதியாக நம்புகிறேன். படப்பிடிப்பில் அருண் விஜய் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறி 100% சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது இந்த முயற்சி எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. இது அவரது கரியரில் மிக முக்கிய ஆக்‌ஷன் படமாக இருக்கும்” என்றார்.

‘மிஷன் சாப்டர்1’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Previous Post

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது !!

Next Post

நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்

Next Post

நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.