• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது !!

by Tamil2daynews
January 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது !!  

 

Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடி படத்திற்கு “சிஸ்டர்”  எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர்  ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர்  சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர்  ஆண்டனி ரூபன் ஆகியோர்  இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர்.

கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,

அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.  இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
Dwarka Productions present Aishwarya Rajesh's Comedy Thriller titled “Sister” | Talks Of Cinemaபெரும் பொருட்செலவில்,  அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப குழு
தயாரிப்பு – பிளேஸ் கண்ணன் (Dwarka Productions)
எழுத்து இயக்கம் – ரா.சவரி முத்து
ஒளிப்பதிவு – தமிழ் A அழகன்
இசை – D இமான்
படத்தொகுப்பு – சரத் குமார்
கலை – சுரேஷ் கல்லேரி
சண்டை – சுகன்
நடனம் – ஷெரிப்
ஒப்பனை – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ஷேர் அலி
உடைகள் – ரமேஷ்
புகைப்படம் – அன்பு
நிர்வாக தயாரிப்பு – நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை – அழகர் குமரவேல்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சபா டிசைன்ஸ்

Previous Post

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.

Next Post

‘மிஷன் சாப்டர் 1’ திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்” – நடிகை ஏமி ஜாக்சன்!

Next Post

'மிஷன் சாப்டர் 1' திரைத் துறையில் எனக்கு புதிய இன்னிங்ஸ்" - நடிகை ஏமி ஜாக்சன்!

Popular News

  • ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • 5, மற்றும் 8வது வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையா? இயக்குனர் பேரரசு பரபரப்பான அறிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.