• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரைம் வீடியோவின் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரைம் வீடியோவின் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்

பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ‘ சுழல் – தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.  இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சுழல்- தி வோர்டெக்ஸ் எனும் இணைய தொடரின் இரண்டாவது சீசனில் காளி பட்டிணத்தின் சிக்கலான சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் மரணத்தை மையமாக கொண்டுள்ளது. அதே தருணத்தில் இதன் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் விவரிக்கிறது. ஆனால் மர்மம் மற்றும் சூழ்ச்சியின் புதிய சுழலுக்குள் நுழைவதற்கு முன் சீசன் 1ன் சஸ்பென்ஸ்  நிறைந்த பயணத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

எச்சரிக்கை : ஸ்பாய்லர்கள்…!

நகரத்தையே உலுக்கும் காணாமல் போதல் :
சிறு நகரத்தை சேர்ந்த நிலா என்ற இளம் பெண் திடீரென காணாமல் போவதுடன் கதை தொடங்குகிறது. அவள் தன் காதலரான இன்ஸ்பெக்டர் ரெஜினாவின் மகனுடன் சேர்ந்து காணாமல் போகிறாள்.

இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையிலான விசாரணை :
இன்ஸ்பெக்டர் சக்கரை ( கதிர்) இந்த வழக்கின்  விசாரணைக்கு பொறுப்பேற்கிறார். ஆனால் ஒரு வழக்கமான காணாமல் போனவர் பற்றிய புகாரை விரைவாக… மிகவும் கொடூரமான ஒன்றாக மாற்றம் பெற்று, இருண்ட ரகசியங்களையும், நீண்ட காலமாக புதைக்கப்பட்ட பொய்களையும் அம்பலப்படுத்துகிறது.
குடும்ப உறவுகள் மற்றும் மறைக்கப்பட்ட பேய்கள் :
தேடல் தீவிரமடையும் போது நிலாவின் சகோதரியான நந்தினி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது சொந்த மற்றும் கடந்த காலத்துடனும் , அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வேதனையான உண்மைகளுடனும் போராடுகிறார்.

பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு நகரம் :
இந்தத் தொடர் நகரத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் இயக்கத்தை சிக்கலான முறையில் பின்னி பிணைக்கிறது. அங்கு பழங்கால மரபுகளும், நவீன யதார்த்தங்களும் எதிர்பாராத தருணத்தில் மோதுகின்றன.

கணிக்க முடியாத திருப்பங்கள் மற்றும் முடிச்சுகள் :
பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களை கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் நிலாவின் தலைவிதி மற்றும் உண்மையை கண்டறியும் பயணத்தைப் பற்றி யூகிக்க வைக்கிறது. இதனால் பொய்கள் மற்றும் மறைக்கப்பட்ட நோக்கங்களின் புதிய கோணங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

பரபரப்பான இறுதி கட்டம் :
தொடரின் இறுதி பகுதியை நெருங்கும் போது.. நிலா காணாமல் போனதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத வஞ்சகம் மற்றும் துரோகம் நிறைந்த புதிரையும் வெளிப்படுத்துகிறது.

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான இந்த இணைய தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து எழுதி, உருவாக்கி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் கே எம் சர்ஜுன் ஆகியோர் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன்( முத்து)  சம்யுக்தா விஸ்வநாதன் ( நாச்சி) மோனிஷா பிளெஸ்சி ( முப்பி), ரினி ( காந்தாரி ), ஸ்ரீஷா (வீரா) அபிராமி போஸ் ( செண்பகம்)  நிகிலா சங்கர் (சந்தானம்), கலைவாணி பாஸ்கர் ( உலகு ), அஸ்வினி நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.’சுழல் – தி வோர்டெக்ஸ்’ சீசன் 2 பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.

https://youtu.be/iopP_dDTgsU?si=0J2nIL7UQloRX9sC

Previous Post

விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அசோக் செல்வன் – ஐஸ்வர்யா ராஜேஷ் – இயக்குநர் கோகுல் – ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

Next Post

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - அசோக் செல்வன் - ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் நடிக்கும் 'அஃகேனம்' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

Popular News

  • பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- அகமொழி விழிகள் பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • Kalappai Makkal Iyakkam P.T.Selvakumar

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

May 13, 2025

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம்

May 13, 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி வரும் ‘Dude’ படத்தில் இருந்து நடிகை மமிதா பைஜூவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

May 13, 2025

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

May 13, 2025

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

May 13, 2025

AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகும் ‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது.

May 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.