• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் – கருணாகரன் நடிக்கும்  ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் ” 
பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பார்ட் –  2 ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் ” 
 
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான ” சுந்தரா டிராவல்ஸ்” படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் ” என்று தலைப்பிட்டுள்ளனர்.
 
கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.  இளம் ஜோடிகளாக விக்னேஷ் – அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.
 
ஒளிப்பதிவு – செல்வா.R
இசை – ஹரிஹரன்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டிங் – P.C. மோகன்
கலை இயக்கம் – மோகன மகேந்திரன்.
ஸ்டில்ஸ் – குமார்
தயாரிப்பு நிர்வாகம் – கணேசன்.M
மக்கள் தொடர்பு – மணவை புவன் 
இணை தயாரிப்பு – S. சிவமுருகன் 
இயக்கம் – கருப்பு தங்கம்
 
படம் பற்றி இயக்குனர் கறுப்பு தங்கம் கூறியதாவது…
 
இந்த கதையில் பஸ் தான் ஹீரோ அதை மையப்படுத்தி தான் அனைத்து  கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். 
இந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த  பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக  வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
 
கொடைக்கானல், பன்றிமலை  போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
 
தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் கருப்பு தங்கம்.
 
ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்டில் விரைவில் அனைவரும் பயணிக்கலாம்.
Previous Post

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

Next Post

பிரைம் வீடியோவின் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்

Next Post

பிரைம் வீடியோவின் ' சுழல் - தி வோர்டெக்ஸ் ' முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.