• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

by Tamil2daynews
June 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

 

ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி-  SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ‘ தசரா’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி-  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.
Imageகடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை *’தகாத் ஆகயா'” என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்-  கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவான ‘தசரா ‘ திரைப்படம் இந்திய அளவில் இருந்தால்…  தற்போது உருவாகும் தி பாரடைஸ் உலகளாவியதாக இருக்கும். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ்… படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.  குறிப்பாக வசனங்களும், அதிர்ச்சியூட்டும் காட்சிகளும், ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் அதிரடி இசையும் , நானியின் திரை தோற்றமும்.. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அத்துடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று ‘தி பாரடைஸ் ‘ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

‘சேரிகளின் ராஜா’ ரசிகர்களை சந்திக்க வருகிறார்… காத்திருங்கள்! இந்த முறை இவரை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
ஆடியோ : சரிகம மியூசிக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
Previous Post

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever விரைவில் திரையில் !!

Next Post

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever விரைவில் திரையில் !!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.