• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஊடகங்களால் பாராட்டப்பட்ட ‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகியிருக்கிறது!

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
ஊடகங்களால் பாராட்டப்பட்ட ‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகியிருக்கிறது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஊடகங்களால் பாராட்டப்பட்ட ‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா ‘ஓடிடியில் வெளியாகியிருக்கிறது!

 

இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன்,அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி,பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார்,இ .எஸ் . பிரதீப் நடித்து இருந்தனர்.மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார்.

காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது பேசப்பட்டது.

இப்படத்தைப் பார்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள் கடைசி வரை சஸ்பென்சை சிதற விடாமல் பராமரித்து,யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொண்ட ஒரு திருப்தியான க்ரைம் திரில்லர் படத்தைப் பார்த்த அனுபவம் ஏற்பட்டது என்று படக்குழுவினைப் பாராட்டி இருந்தார்கள்.படத்திற்கு நல்ல மாதிரியான நேர் நிலையான விமர்சனங்கள் வந்திருந்தன.

உதாரணத்திற்குச் சில:
படங்களைத் தர நிர்ணயம் செய்யும் IMDB படத்திற்கு 10 க்கு 9.9 தர மதிப்பெண்கள் கொடுத்திருந்தது.’புக் மை ஷோ ‘தளம் 10 க்கு 9 குறியீட்டைக் காட்டியது.

தமிழின் முன்னணி இதழான தினத்தந்தி ‘துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குநராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி ‘என்றும் ‘கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் ‘என்றும் பாராட்டிருந்தது .

இந்து தமிழ் திசை இதழ் ‘யூகிக்க முடியாத ஆனால் நம்பகமான திருப்பங்களால் நிறைந்த திரைக்கதையால் இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு’ என்று கூறியிருந்தது.

தினகரன் இதழ்,’ரகு ஸ்ரவன் குமாரின் பின்னணி இசை, கிரைம் த்ரில்லருக்குத் தேவையான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‘என்று பாராட்டியது.

மாலைமலர் இதழ், ‘யாருமே எதிர்பாராத திருப்பத்தை இறுதிக்காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. சுவாரசியம் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக லாரா படம் அமைந்துள்ளது ‘என்று பாராட்டியது.

ZEE தமிழ் NEWS, ‘ க்ரைம் தில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு’ லாரா’ நிச்சயம் பிடிக்கலாம்’ என்று கூறியது.டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில இதழ் ,’ ஒரு சிறு நகரம் சார்ந்த மர்மக் கதையாக இது சரியாக எடுக்கப்பட்டுள்ளது’ என்று பாராட்டியது .அது மட்டுமல்லாமல் நான்கரை நட்சத்திர மதிப்பையும் கொடுத்து இருந்தது.

இவ்வாறு ஊடகங்களில் கவனம் பெற்றுப் பாராட்டுகளைப் பெற்ற ‘லாரா’ படம் வணிகரீதிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் திரைப்படங்களிலேயே முதலில் வெற்றிக்கனி ருசித்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்போது ‘லாரா’ திரைப்படம் ‘டெண்ட் கொட்டா’ ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி அடுத்த தளத்திலான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.வெளியான அன்றே ட்ரெண்டிங்கில் இடம் பெற்று அசத்தியது. படக் குழுவினர் படத்தின் அடுத்த வெற்றிப் பரிமாணத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Previous Post

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

Next Post

மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் – ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படுகிறது

Next Post

மெகா ஸ்டார் ' சிரஞ்சீவி நடிப்பில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் - ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படுகிறது

Popular News

  • பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற தளபதி விஜய் ரசிகர்கள்….

    பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற தளபதி விஜய் ரசிகர்கள்….

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

October 25, 2025

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

October 25, 2025

“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

October 25, 2025

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கான்சப்ட் வீடியோ வெளியானது !!

October 25, 2025

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

October 25, 2025

கென் கருணாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

October 25, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.