
பொதுவாக நடிகர்கள் நாடாள முடியாது என்ற ஒரு பேச்சு அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.
இது அரசியல்வாதிகளால் சொல்லப்படும்.
சில வருடங்களாக சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அதன் மூலம் தனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகும் என்று தனது ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார் .
ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை .
எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறி தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த.
இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் கடந்த மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு ஒன்றை அளித்திருந்தார். இதை கேள்விப்பட்ட நடிகர் விஜய்யோ மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகி தனது தந்தைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தனது தந்தையை முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை லைட்டாக சிறிதளவு வரவே தனது ரசிகர்களை தற்போது நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் விருப்பப்பட்டவர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறினார்.
அதன்படி முதல் சுற்றிலேயே தளபதி விஜய் ரசிகர்கள் தமிழகம் எங்கும் 115 இடங்களை வென்று அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் இது ஒரு மிகப்பெரிய சாதனைதான் என்றாலும் வந்து வெற்றி பெற்றவர்கள் ரசிகர்களை தன்னுடன் அழைத்து ஒரு வேளை உணவு பரிமாறி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகர் இளையதளபதி விஜய்