• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான “பறந்து போ” படத்தை வழங்குகிறது !!

by Tamil2daynews
February 1, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், பிரபல  இயக்குநர் ராமுடன் இணைந்து, அவரது அடுத்த படமான “பறந்து போ” படத்தை வழங்குகிறது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின்  இயக்கத்தில்  ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்,  அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது.  இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம்,  மனதை  இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில்  வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
Imageஒரு  பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத  அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட,  ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை.

ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு ‘பறந்து போ’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, ‘பேரன்பு’ மற்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர்  ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக்  காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரையிடப்பட்டபோது, ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .

மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம், “சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் – அவருக்கு ‘சென்னை 28’  பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் ‘பறந்து  போ’ படம் மூலம் நடந்தது.

‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம்,  முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.

“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.  எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.  அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது – அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.

பிரபல இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…,
“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான  மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.

“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக  உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராமிற்கு நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் ராம் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Previous Post

“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு”

Next Post

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

Next Post
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

Popular News

  • தொடரும் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

    0 shares
    Share 0 Tweet 0
  • “நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

May 11, 2025

ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

May 11, 2025

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

May 11, 2025

“நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

May 11, 2025

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

May 11, 2025

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

May 11, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.