• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது.

by Tamil2daynews
February 14, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில்  கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில்  “மாமாகுட்டிமா”  பாடல் புரோமோ வெளியானது.

 

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.  இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

‘முத்து முத்து கருவாயா’, ‘தாகம்தீர வானே இடிந்ததம்மா,’ ‘சண்டாளனே’, ‘கண்ணத்தொறந்ததும் சாமி’ ஆகியவை அஸ்மின் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்களாகும். மேலும், சமீபத்தில் இலங்கையில் இருந்த வெளியாகி உலகெங்கும் டிரெண்ட் ஆன ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்’ பாடலும் இவர் எழுதியது தான்.

‘முத்து முத்து கருவாயா’ மூலம் ஏற்கனவே வெற்றிப் பாடலைக் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் தேவா-அஸ்மின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராப் பிரசாத் இயக்கியுள்ள இந்த அல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டு வைத்தார்.

இது பற்றி பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் கூறும்போது.

காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது.

மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின்

தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கெசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார் இது நான் பெற்ற பாக்கியம்.

மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம் இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்  என்று கூறினார்.
Previous Post

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

Next Post

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் ‘ராமம் ராகவம்’

Next Post

சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் - தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படம் 'ராமம் ராகவம்'

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.