“டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் ரசிகர்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி, அனிமேஷன் உலகின் மிகப்பெரிய கலாச்சார கொண்டாட்டமாக மாறியது. கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிமீ ரசிகர்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் 250க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியது, இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.
தனது விருப்பமான கதாபாத்திரமான ஜெனிட்சுவை சுட்டிக்காட்டும் ஜாக்கெட்டில் வருகை தந்திருந்தார் நடிகர் டைகர் ஷெராஃப்.
ரசிகர்களுடன் உரையாடியபோது டைகர் ஷெராஃப் கூறுகையில்,
படத்தில் தான் ரசித்த சண்டைக் காட்சியைப் பற்றி பேசினார். குறிப்பாக ஜெனிட்சு மற்றும் கைகாகுவுக்கு இடையேயான காட்சியே அவருக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், கோட்டையில் அமைதியாக நுழைந்த ஒரே மனிதர் ஜெனிட்சுதான் என்று நினைத்ததாகவும் கூறினார்.
ராஷ்மிகாவுக்கு பிடித்த காட்சியை கேட்டபோது,
அகாசா vs கியு மற்றும் தஞ்சிரோ சண்டைக் காட்சி ரசிகர்களிடமிருந்து அதிரடியான வரவேற்பைப் பெற்றது என்று கூறினார்.
நாடு முழுவதும் வெளியாக உள்ள படத்திற்கு முன் நடத்தப்பட்ட இந்த ஸ்கிரீனிங், ரசிகர்களுக்கு இன்ஃபினிட்டி கேஸ்டில் படத்தின் உணர்ச்சி பூர்வமான மற்றும் அதிரடி நிறைந்த உலகை முன்னதாகவே அனுபவிக்க வைத்தது. சில நேரங்களில் கண்ணீர் வடிக்கவும், சில நேரங்களில் சண்டைக் காட்சிகளில் ஆரவாரம் செய்யவும் வைத்தது, இப்படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பை ரசிகர்களிடையே வெளிப்படுத்தியது.









