• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி;

by Tamil2daynews
September 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் சிறப்புக் காட்சி;

“டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் ரசிகர்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சி, அனிமேஷன் உலகின் மிகப்பெரிய கலாச்சார கொண்டாட்டமாக மாறியது. கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிமீ ரசிகர்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் 250க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியது, இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.

கதாநாயகர்கள் தஞ்சிரோ மற்றும் நெசுகோவை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையில் வந்திருந்தார் நடிகை ராஷ்மிகா.

தனது விருப்பமான கதாபாத்திரமான ஜெனிட்சுவை சுட்டிக்காட்டும் ஜாக்கெட்டில் வருகை தந்திருந்தார் நடிகர் டைகர் ஷெராஃப்.

ரசிகர்களுடன் உரையாடியபோது டைகர் ஷெராஃப் கூறுகையில்,

படத்தில் தான் ரசித்த சண்டைக் காட்சியைப் பற்றி பேசினார். குறிப்பாக ஜெனிட்சு மற்றும் கைகாகுவுக்கு இடையேயான காட்சியே அவருக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், கோட்டையில் அமைதியாக நுழைந்த ஒரே மனிதர் ஜெனிட்சுதான் என்று நினைத்ததாகவும் கூறினார்.

ராஷ்மிகாவுக்கு பிடித்த காட்சியை கேட்டபோது,

அகாசா vs கியு மற்றும் தஞ்சிரோ சண்டைக் காட்சி ரசிகர்களிடமிருந்து அதிரடியான வரவேற்பைப் பெற்றது என்று கூறினார்.

நிகழ்ச்சியின் சூழலை மேலும் சிறப்பாக்க மாபெரும் தஞ்சிரோ இன்ஃப்ளேடபிள் சிலை, கதாபாத்திர ஸ்டாண்டீக்கள் மற்றும் சீரியஸிலிருந்து வண்ணமயமான காட்சிகள் கொண்டு மொத்த இடமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் வெளியாக உள்ள படத்திற்கு முன் நடத்தப்பட்ட இந்த ஸ்கிரீனிங், ரசிகர்களுக்கு இன்ஃபினிட்டி கேஸ்டில் படத்தின் உணர்ச்சி பூர்வமான மற்றும் அதிரடி நிறைந்த உலகை முன்னதாகவே அனுபவிக்க வைத்தது. சில நேரங்களில் கண்ணீர் வடிக்கவும், சில நேரங்களில் சண்டைக் காட்சிகளில் ஆரவாரம் செய்யவும் வைத்தது, இப்படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பை ரசிகர்களிடையே வெளிப்படுத்தியது.
இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” திரைப்படத்தின் முன்பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 750-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், இந்தியாவில் ஒரு அனிமீ திரைப்படத்திற்கு கிடைக்கப்போகும் அதிகபட்ச திரையிடல் என்ற பெருமையையும் பெறுகிறது.
கிரன்சிரோல் மற்றும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இணைந்து, இந்த படத்தை செப்டம்பர் 12 முதல் ஐந்து மொழிகளில் வெளியிடுகிறது – ஜப்பானிய மொழி (ஆங்கில சப்டைட்டில்களுடன்), ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.
Previous Post

உருட்டு உருட்டு – விமர்சனம்

Next Post

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

Next Post

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.டி.நாயுடு(GDN) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.