• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின் “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

by Tamil2daynews
July 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மியூசிகல் சென்ஷேசன் சாய் அபயங்கர், ஷேன் நிகாமின்   “பல்டி” படத்திற்கு இசையமைக்கிறார்!!

 

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான “பல்டி” படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.  இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில்,  பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்  என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. வீடியோவின்  முடிவில் “பல்டி ஓணம்” எனும் வாழ்த்தும், சாய் அபயங்கரின் பெயர் பொறித்துள்ள “பல்டி ஜெர்ஸி”- யுடன் மோகன்லாலின் வாழ்த்தும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.
சாய் அபயங்கர் பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யூட்யூபில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்த அவரது ஆல்பம் பாடல்கள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது மலையாள சினிமாவில் கலக்கலாக  கால் பதித்திருக்கும் சாய்,  தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக  கலக்கி வருகிறார்.  முன்னணி நட்சத்திரங்களின் படங்களான ‘சூர்யா 45’ (சூர்யா நடிப்பில்), ‘ STR 49 ‘ (சிலம்பரசன் நடிப்பில்), ‘டூயூட்’- DUDE ‘(பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்), லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

“பல்டி” படத்தினை  தயாரிப்பாளர்கள் சந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், STK Frames மற்றும் Binu George Alexander Productions  நிறுவனங்கள் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர். இசை மற்றும் ஆக்‌ஷனுக்கு  முக்கியத்துவம் அளித்துள்ள இப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
ஒளிப்பதிவு – அலெக்ஸ் J. புலிக்கல்

பாடலாசிரியர் – வினாயக் சசிகுமார்
கலை இயக்கம் – ஆஷிக் S
உடைகள் – மெல்வி J
ஆக்‌ஷன் – ஆக்‌ஷன் சந்தோஷ் & விக்கி மாஸ்டர்
மேக்-அப் – ஜிதேஷ் போய்யா
ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த்
கலர் கிரேடிங் – ஸ்ரிக் வாரியர்
ஸ்டில்ஸ் – சுபாஷ், சஜித் ஆர்.எம்
VFX – ஆக்ஸெல் மீடியா, ஃபாக்ஸ் டாட் மீடியா
சவுண்ட் மிக்ஸிங் – M.R. ராஜகிருஷ்ணன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – பென்னி கட்டப்பன
நடனம் – அனுஷா
இணை இயக்குநர்கள் – ஸ்ரீலால் எம், சபரி நாத், மெல்பின், சாம்சன் செபாஸ்டியன், ராகுல் ராமகிருஷ்ணன்
தயாரிப்பு மேலாளர் – கிஷோர் புரக்கட்டிரி
CFO – ஜோபீஷ் ஆன்டனி (STK Frames), COO – அருண் சி தம்பி
விநியோகம் – Moonshot Entertainments Pvt. Ltd
இசை வெளியீட்டு நிறுவனம் – Think Music
டைட்டில் டிசைன் – Rocket Science
விளம்பர வடிவமைப்பு – Viyaaki
மார்க்கெட்டிங் & புரமோஷன் – Snakeplant LLP
மக்கள் தொடர்பு –  யுவராஜ்
Previous Post

‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு : இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் !!

Next Post

நடிகர் கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜையுடன் படபிடிப்பு தொடக்கம் !!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.