• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!

by Tamil2daynews
January 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா”!! 

 

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.  K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய   வேடங்களில் நடிக்க,  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்  இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில் நுட்பக் குழு
இயக்கம் –  சுகீத்
கதை திரைக்கதை –  ராகேஷ் N சங்கர் ,
வசனம் –  K சந்துரு
இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு – விவேக் மேனன்
எடிட்டிங் – நவீன் விஜயன்
தயாரிப்பு – நஜீப் காதிரி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )
Previous Post

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

Next Post

‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.!

Next Post

'பதான்'- ஓராண்டு நிறைவு ! 'ஜவான்'- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான 'டங்கி' திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்...2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.