• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !

Jigiri Dosthu

by Tamil2daynews
March 10, 2020
in சினிமா செய்திகள்
0
நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !
0
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.

தன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் 2012 ல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக  வெளிச்சம் பெற்றார். தன் கதை
சொல்லும் இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில்  முக்கியமாக கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம்,   திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா? கெட்டவரா?ஆகிய குறும்படங்களில்  நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார். மேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்து திரைப்பட இயக்க நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் அப்படத்தில் முக்கியமான சிறு பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

2018 ல் SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். மேலும் 2017 Behindwoods Gold Medal க்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகியாக ரட்சசன், அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் வீ ஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம் ( எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றவர் ), ஜாங்கிரி மதுமிதா ( ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படப்புகழ்),RNR மானோகர், சரத்( விஜய் டீவி KPY புகழ் ) ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் குமார் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கி நடிப்பதுடன் ஜோஷ் K, SB ஆர்ஜுன் மற்றும் ஹக்கா J ஆகியோருடன்  இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு படப்புகழ் RV சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத்தொகுப்பு செய்ய மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். KRAFTSWORKS நிறுவனம் DI மற்றும் CG செய்கிறது. ஒலியமைப்பு சரவணகுமார் செய்ய சுதன் பாலா பாடல்கள் எழுதுகிறார்.

Tags: Jigiri Dosthu
Previous Post

“வால்டர்” சமூகத்திற்கு அவசியமான படம் – நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா !

Next Post

லாரன்ஸ் தம்பி மீது நடிகை பாலியல் புகார்..!அதிர்ச்சியில் ராகவா லாரன்ஸ்..!

Next Post
லாரன்ஸ் தம்பி மீது நடிகை பாலியல் புகார்..!அதிர்ச்சியில் ராகவா லாரன்ஸ்..!

லாரன்ஸ் தம்பி மீது நடிகை பாலியல் புகார்..!அதிர்ச்சியில் ராகவா லாரன்ஸ்..!

Popular News

  • இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன்  இயக்குனராக  திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    இயக்குனர் சீனுராமசாமியிடம்  துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இயக்குனராக திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் (VEGULI) நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகமூடி அணிந்த கலைஞர் தி ஆர்ட்டிஸ்ட் 404 ‘ஜான் டோ’ படத்திலிருந்து ‘நான் போதுமா’ பாடலை வெளியிட்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.