• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில்   ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

by Tamil2daynews
July 22, 2020
in சினிமா செய்திகள்
0
விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில்   ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.
இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி அன்று   115 வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க அனாதைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாள் ஜூலை 23ல் வருகிறது .அதற்கு தங்களது தொண்டின் மூலமும் சேவை மூலமும் அசத்த வேண்டும் என்று கருதி அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஜூலை 23 , சென்னையில் 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் வழக்கமாக உணவு வழங்கப்படுகிறது. இப்படி சூரியாவின் 45வது பிறந்த நாளை சேவையின் ஈரத்தோடு கொண்டாடுகிறார்கள்.

சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப்போற்று’ படம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். விரைவில் வர இருக்கும் அந்த படத்தின் டீஸரும் பாடல்களும் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளியி ருக்கின்றன.

‘வெய்யோன் சில்லி…’ பாடலும், ‘மண்ணுருண்டை…’ பாடலும் பெரிய வெற்றி பெற்றுவிட்டன .’ சிஎன் சிறுக்கி கிட்ட  சீவனத் தொலைச்சிட்டேன்’ வரிகளும் ‘பருந்தாகுது ஊர்க்குருவி;
வணங்காதது என் பிறவி’ வரிகளும் ரசிகர்களின்
அன்றாட  முணுமுணுப்புகள் ஆகிவிட்டன. டீஸரும்  வெளியாகி அதிரிபுதிரி மில்லியன்கள் வெற்றியில் எகிறிக் கொண்டிருக்கிறது.
விரைவில் வெளிவரயிருக்கும் மூன்றாவது பாடலான ‘ காட்டுப்பயலே…’ பாடலின்  முன்னோட்டமாக , ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ தயாராகிவருகிறது. இது, சூரியாவின் பிறந்தநாள் ஜூலை 23 காலை 10மணிக்கு ,
உலக சூரியா ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வெளியிடப்படுகிறது.

2D என்டர்டெய்ன்மென்ட், சிக்யா என்டர்டெய்ன்மென்ட் உடன் இணைந்த தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள – சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்திற்காகத்  ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். விரைவில் நாட்டில் சுமுகம் நிலவும்; படம் திரையில் பரவும்.

Previous Post

பிஸ்கோத் ‘ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம்

Next Post

37 Years Of “Mundhanai Mudichu”

Next Post
37 Years Of “Mundhanai Mudichu”

37 Years Of "Mundhanai Mudichu"

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.