• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

by Tamil2daynews
October 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

 

அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) – பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ – John Doe’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ- John Doe’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 ( Artist 404) எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது. படத்தொகுப்பு பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், ” ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகாரனா? காணாமல் போன குழந்தையா? அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா..? என்பதை பற்றிய சுவாரசியமான கதையாக உருவாகி இருக்கிறது. இதில் தெரிந்ததற்கும்… நம்பப்படுவதற்கும்… இடையிலான எல்லைக்கோடு மறையத் தொடங்குகிறது. கதையின் நாயகனான சந்துரு தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களை தேடி பயணிக்கும் போது… கடைசி கேள்வியை விட, அவருக்குள் எழும் மற்றொரு ஒரு கேள்வி மிகுந்த கவலையை தருகிறது. அது என்ன வெனில்… ஜான் டோவை பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ள தயாராக இல்லை என்றால் என்ன செய்வது? இந்த கேள்விக்கான பதிலை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.‌
‘பாகுபலி’ என்ற பிரம்மாண்ட படைப்பை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அர்கா மீடியாஒர்க்ஸ்- அர்ஜுன் தாஸ்- இயக்குநர் மதுமிதா – என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவாகும் ‘ஜான் டோ- John Doe’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதில் கதையின் நாயகனான சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ்- காவலர் சீருடையில் தோன்றுவதும்… டைட்டில் லுக்கில் அவரது கையில் பொம்மை ஒன்று இருப்பதும்.. பார்வையாளர்களிடத்தில் படத்தை பற்றிய தாக்கத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது.‌

இதனிடையே நடிகர் அர்ஜுன் தாஸ் முதல் முதலாக ‘ஜான் டோ’ திரைப்படத்தில் போலீஸ் சீருடை அணிந்து நடித்திருப்பது அவரது ரசிகர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் பேரார்வத்தை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹைக்கூ – விமர்சனம்

Next Post

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

Next Post

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.