• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

KV குகன் இயக்கும் பரபர திரில்லர் படம்..!

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
KV குகன் இயக்கும் பரபர திரில்லர் படம்..!
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர்  KV  குகன் இயக்கும் பரபர திரில்லர், “WWW (who, where, why)” !
Ramantra Creations- ஒளிப்பதிவாளர் KV குகன் இயக்கத்தில் பன்மொழி திரில்லர் திரைப்படத்தை தயாரிக்கிறது.
ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன், இந்திய திரை உலகில், பலராலும் கொண்டாப்படும், மதிப்பு மிகுந்த நபர்களில் ஒருவர். அவர்  தெலுங்கில் இயக்குநராக “118” படம் மூலம் அறிமுகமானார். இந்த திரில்லர் திரைப்படம், தெலுங்கு திரையுலகில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று, பெரு வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி தெலுங்கில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளுக்கும் பரவியது. பல தென்னிந்திய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து “WWW (who, where, why)” எனும் தலைப்பில் தனது புதிய படத்தை இயக்குகிறார் KV குகன். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் KV குகன் கூறியதாவது…
 “ WWW” திரைப்படம் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சர்யபடுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் கதைப்போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக அமைந்து இருக்கும். எனது முதல் தெலுங்கு மொழி படமாக வெளியான “118” படத்திற்கு, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை கொடுத்துள்ளது. “118”- திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்ட பகுதிகளிலும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தான் இரு மொழிகளிலும், ஒருசேர படத்தை எடுப்பதற்கான உத்வேகத்தை எனக்கு தந்துள்ளது.  தியேட்டரில் இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறேன். டிரெய்லர்,  இசை மற்றும் உலகமெங்கும் படம் வெளியிடும் தேதியை, விரைவில் அறிவிப்போம்.
படத்தின் நடிகர் குழுவை பற்றி KV குகன் கூறியதாவது…
எனது முதல் படமான “இனிது இனிது” திரைப்படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஆதித். அப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கபட்டவர். அதன் பிறகு  தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து சிறப்பான நடிகர் எனும் பெயர் பெற்றார். தமிழில் நடிகர் தனுஷுடன் “தங்க மகன்” திரைப்படத்தில் எதிர்மறைத்தன்மை பாத்திரத்தில் நடித்தார் பல வெற்றி பெற்ற தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றார். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் அவர்களின் மகளான, ஷிவானி மிகவும் திறமையான நடிகை. படத்தின் பல இடங்களில், அசாத்தியமான காட்சிகளையும், ஒரே டேக்கில் அவர் நடித்து அசத்தியது படக்குழுவையே ஆச்சர்யப்படுத்தியது. இது சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலையும் அர்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது.
இப்படத்தை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன். Ramantra Creations சார்பில் Dr. ரவி P. ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணியாற்றுகிறார்.
Previous Post

அமீர் நடிப்பில் நடப்பு அரசியல் பின்னணியில் உருவாகி வரும் ‘நாற்காலி’..!

Next Post

“கபடதாரி” விரைவில் திரையில் ! 

Next Post
“கபடதாரி” விரைவில் திரையில் ! 

“கபடதாரி” விரைவில் திரையில் ! 

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.