• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

by Tamil2daynews
November 22, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

 

*23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி, கசடதபற, போட்* என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படமும் காமெடி, ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களுக்கும் மேலாகத் திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், படத்தின் மிக முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நடிகர் விமலின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள விமல், ‘நவோரியா’ தனது திரைப் பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

‘நவோரியா’ திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, சக்தீ வெங்கட்ராஜ் எம் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

மிகவும் கலகலப்பாகவும், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் ‘நவோரியா’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
Previous Post

நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Next Post

எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

Next Post

எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RaPo23 திரைப்படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக் வெளியீடு – ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.