• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் LIGER

by Tamil2daynews
January 22, 2021
in சினிமா செய்திகள்
0
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் LIGER
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி இந்திய திரைப்படத்திற்கு 
LIGER ( saala Crossbreed ) என தலைப்பிடப்பட்டுள்ளது. 
தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா பாலிவுட் உலகில் எதிர்பார்ப்புமிக்க இந்தியளவிலான பன்மொழி திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் எனும் பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தை தந்த கமர்ஷியல் வெற்றி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 
 
Puri connects நிறுவனத்துடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன்  இணைந்து தயாரிக்கிறது. 
 
 
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். 
 
இன்று படக்குழுவினர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 
 
இப்படத்திற்கு “LIGER” Saala Crossbreed எனும் அடி தலைப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா நீண்ட தலை முடியுடன், மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரருடைய தோற்றத்தில் கையில் கிளவ்ஸுடன் நிற்கிறார். பின்னணியில் சிங்கமும், புலியும் கலந்து நிற்கிறது. 
 
லைகர் Liger என்பது உயர்தர  சரணாலய விலங்காகும். இவ்விலங்கு ஆண் புலி, பெண் சிங்கத்துடன் கலப்பதால் உருவாகும் கலப்பின விலங்கே Liger. 
 
இப்படத்தின் டைட்டில் வித்தியாசமானதாகவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்துள்ளது. 
 
தனது நாயகர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் திறமை கொண்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான,  இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா நீண்ட தலைமுடியுடன் மிகவும் ஸ்டைலிஷான  லுக்கில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அழகாக தோற்றமளிக்கிறார். 
 
இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர். 
 
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார்.
 
 பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். 
 
ரம்யா கிருஷ்ணன் மிக முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது. 
 
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.
Previous Post

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் ! 

Next Post

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

Next Post
ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.