• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

by Tamil2daynews
February 7, 2021
in சினிமா செய்திகள்
0
கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி”  ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் “கமலி From நடுக்காவேரி”.
Appundu Studios Pvt Ltd இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்

படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது…

இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விசயங்களை தான் திரைக்கதையாக மாற்றினேன். ஒரு வகையில் நான் ஆண் கமலி. இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான்  கதை. கிராமத்தில் இருந்துவந்து IIT-க்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும். இப்போதும் கிராமபுறங்களில் பென்கள்  கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை அதனை வெளிக்கொண்டுவரும் படைப்பாக இப்படம் இருக்கும்.

இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.என் கதைக்கான பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி மிகச்சரியானவராக தோன்றினார். கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர். இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள். கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப்பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையை தேடியபோது,

நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது.  அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம், அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா என கேட்டேன். அவர்களும்  ஒப்புக்கொண்டார்கள் சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களை பணியை செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர் அதி திறமைசாலிகள் அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வரவேண்டும்

 

இப்படத்தில்நக்கலைட்ஸ் குழுவினர்  ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா உடைய உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.  படத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார். தீனதயாளன் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான, அற்புத இசையை தந்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும் வரும் பிப்ரவரி 19 உலகம் முழுவதும் மஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்.

Next Post

நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் “குட்டி ஸ்டோரி”..!

Next Post
நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் “குட்டி ஸ்டோரி”..!

நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் "குட்டி ஸ்டோரி"..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணையும் #DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.