• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் “குட்டி ஸ்டோரி”..!

by Tamil2daynews
February 7, 2021
in சினிமா செய்திகள்
0
நான்கு இயக்குநர்களின் கை வண்ணத்தில் “குட்டி ஸ்டோரி”..!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr  ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர் முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன் இரண்டாவது தொகுப்பை  விஜய் மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர் முதல்முறையாக 4 இயக்குனர்கள் 4 கதைகளை இயக்கி பெரிய திரையில் வெளியாவது குறிப்பிடத்தக்கது இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே  நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார் விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான் ஆர்யா சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்துள்ளனர்
குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் Dr.ஐசரி .K. கணேஷ் பேசுகையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு  உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது உடனே ஒப்புக்கொண்டேன் முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம் என்றார்
இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில் நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன் அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில்  நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம் நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார் முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையைமுடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது என்றார்
இயக்குனர் விஜய் பேசுகையில் முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது மற்ற  இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது இந்த கதைக்கு  யாரை நடிக்க வைக்கலாம்  என யோசித்தபோது  மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது  உடனே அவரிடம்  கதையை  சொன்னேன்  அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக்கொடுத்தார் நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன் முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம் என்றார்
இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில் முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன் ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்
இயக்குனர் நலன் குமாரசாமி பேசியதாவது  லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன் அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன் இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன் அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார் மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர் நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன் 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன் ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார் ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார் நாங்கள் நினைத்தது போலவே இந்த கதை அமைந்துள்ளது என்றார்
Previous Post

கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

Next Post

அதர்வா நடிக்கும் ஆக்சன் படம்..!

Next Post
அதர்வா நடிக்கும் ஆக்சன் படம்..!

அதர்வா நடிக்கும் ஆக்சன் படம்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணையும் #DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • “கலைப்புலி”தாணு வின் 50 ஆம் ஆண்டு..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.