• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

நிதின்சத்யா தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன்!

by admin
April 22, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
நிதின்சத்யா தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன்!
4
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா

“ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வைபவை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்கின்றார். இவர் வில்லனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பல நட்சத்திரங்கள் கைக்கோர்த்துள்ளது ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய SG சார்லஸ் இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்
கலை – ஆனந்த் மணி
சண்டைப்பயிற்சி – மிராக்கல் மைக்கேல

இப்படத்தின் முதல் பார்வை டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

Previous Post

71st Stage Show of Y.Gee.Mahendra’s “3 Ji” Event Stills

Next Post

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “மயூரன்”

Next Post
கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “மயூரன்”

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “மயூரன்”

Popular News

  • நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜாவின் இசையில், “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, ஸ்ரேயா சரண் மற்றும் ஷர்மன் ஜோஷியின் நடிப்பில், புத்துணர்ச்சியூட்டும் ரொமாண்டிக் பாடல் “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜான்சி” இணையத் தொடர் இரண்டாவது சீசன் வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.